செல்போன் வழித்தகவல் சிந்திக்க வைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சுபவிரயங்கள் கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக முடியும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்யோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
சந்தோஷம் கூடும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
பிரச்சினைகள் அகலும் நாள், பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. அன்னிய தேச அழைப்புகள் வரலாம். உத்யோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சலுகை கிடைக்கும்.
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.
வரன்கள் வீடு தேடி வரும் நாள். வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. தெளிவாக இருந்தாலும் சுற்றியிருப்பவர் புதியவர்கள் உங்களை குழப்புவர். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.
உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புண்ணிய காரியத்திற்கு பொருளுதவி செய்வீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு.