காலை முதல் இரவு வரை சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்...!
Facewash மூலம் முகத்தை கழுவவும்
முதலில் உங்களது சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து நம்பகமான பிராண்டைப் பயன்படுத்த தொடங்குங்கள். காலையில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாலையில் மாசு தொடர்பான அழுக்குகளை அகற்றவும் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவுவது நல்லது.
அதிக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் தோல் வறண்டு போகலாம்.
Cleanser மூலம் சுத்தப்படுத்துதல்
தோல் பராமரிப்பு வழக்கத்தில் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவருடைய சருமத்தின் வகையைப் பொறுத்து நல்ல க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
வெளியில் இருந்து வந்த பிறகு அல்லது இரவில் தூங்கும் முன், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளென்சரைக் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, மேக்கப்பை அகற்றவும் உதவும்.
TONER முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தம் செய்த பிறகு Toner-ஐ பயன்படுத்துவது அவசியம். Toner சருமத்தில் ஆழமாக ஊடுருவி, க்ளென்சரால் தவறவிட்ட மேக்கப் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது.
கூடுதலாக, Toner சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற Toner என்னவென்று தெரியவில்லை என்றால் தோல் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் உங்களுக்கான பிராண்டை உபயோகிக்கலாம்.
முகத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்...
மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் தேவை.
எனவே, நீங்கள் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப்பிங் அல்லது முகத்தை சுத்தம் செய்யும் போதெல்லாம், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள தேன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலானவற்றையும் மாய்ஸ்சரைசர்களாகப் பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் அவசியம்
கோடை வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பகலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம்.
ஒரு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான SPF-ஐத் தீர்மானிக்க தோல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது.