ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை - ரசிகர்கள் வாழ்த்து
நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.
நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இத்தம்பதி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
sangeetha.v.official
கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி சங்கீதாவுக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை ரெடின் நடத்தி இருந்தார். பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி இருந்தனர்.
sangeetha.v.official
இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
sangeetha.v.official
ரெடின் கிங்ஸ்லி தனது மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அழகிய புகைப்படத்தை சங்கீதா பகிர்ந்துள்ளார்.