வெந்து கெட்டது அகத்திக்கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரைனு ஒரு பழமொழி இருக்கு. இதோட அர்த்தம் என்னன்னா முருங்கைக்கீரையை நல்லா வேக வச்சிதான் சாப்பிடணும். ஆனா அகத்திக்கீரையை ரொம்பவும் வேக விடக்கூடாது. வேகவிட்டா அதோட மருத்துவத்தன்மை மாறிப்போயிரும்.
முருங்கை வேர்ல இருந்து பூ வரைக்கும் எல்லாமே மருத்துவக்குணம் நிறைஞ்சது. வைட்டமின் ஏ, டி, ஈ, கே மட்டுமில்லாம பி 1, பி 2, பி 6&னு அடுக்கிக்கிட்டே போகலாம்.
முருங்கைக்கீரையைப் பொடியாக அரிஞ்சி, கேரட்டை துருவிப்போட்டு, பசு நெய்யை விட்டு பொரிச்சி, கடைசியாக முட்டையை ஊத்தி கிளறி சாப்பிட்டா தாம்பத்ய உறவுல ஈடுபாடில்லாத ஆண்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கைப் பூவை அரைச்சி பால்ல கொதிக்க வச்சி பனங்கல்கண்டு சேர்த்து 48 நாள் சாப்பிட்டு வந்தா தாம்பத்ய உறவுல விருப்பம் உண்டாகும்.
முருங்கைப் பூவை காய வச்சி பொடியாக்கி அதுல தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டாலும் ஆண்மை கூடும்.
நீர்த்துப்போன விந்து கட்டியாகும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சரியாகும். கர்ப்பப்பை ஸ்ட்ராங்காகும்.
முருங்கைல பிஞ்சுக்காயை பால்ல வேக வச்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா ஆண்மைக்குறை உள்ளவங்களுக்கு நிச்சயமா பலன் கிடைக்கும். இதனால முருங்கைக்காயை இயற்கை வயாகரானுகூட சொல்வாங்க.