தலையில் எண்ணெய் தேய்ப்பது சரியா...?

தலையில் எண்ணெய் தேய்ப்பது சரியா...?

Published on
தலையில் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்கவும் மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும்.
உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.
தலைக்கும் தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கும் தேவைப்படும் சத்துப்பொருட்களுக்கும் வைட்டமின்களுக்கும், மயிர்க்கால்கள் உறுதியாக இருக்கவும் தலைமுடி நன்கு வளரவும் எண்ணெய் மிகவும் உதவுகிறது.
தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, பேன் தொந்தரவு இல்லாமலிருக்க, தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய் மிகவும் உதவுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com