கற்றாழை முடி வறட்சி மற்றும் அரிப்புக்கு சிறந்தது?

கற்றாழை முடி வறட்சி மற்றும் அரிப்புக்கு சிறந்தது?

Published on
பெண்கள் கூந்தலை பராமரிக்க கற்றாழையை பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும்.
இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன.
உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும்.
ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது.
கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம்.
கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம். முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.
கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது.
உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com