சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்கள்..!
சிவப்பு மிளகாயில் பல்வேறு இதர தாவர கூறுகள் உள்ளன. அவைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. மிளகாய்க்கு கார தன்மையை வழங்கும் காப்சைசின் என்பது ஒரு ஆன்டிஆக்சிடெண்ட் தாவர கூறாகும்.
குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இந்த அற்புதமான ரசாயனம் உதவுவதாக சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
புற்றுநோய் அணுக்களுடன் தொடர்புடைய சில மரபணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அவற்றை வளரவிடாமல் தடுப்பதையும் காப்சைசின் மாற்றக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .
இருப்பினும், சில ஆய்வுகள் மிளகாய் உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக கூறுவதால், இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
இருப்பினும், சில ஆய்வுகள் மிளகாய் உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக கூறுவதால், இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
சிவப்பு மிளகாய் உலகின் பெரும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். சிவப்பு மிளகாயில் உள்ள காப்சைசின் என்னும் பயோஆக்டிவ் என்னும் உயிரிமுனைப்புக் கொண்ட ஒரு தாவர கூறு பல்வேறு அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
உணவு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சிவப்பு மிளகாய் ஒரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பியாகும், அதாவது உணவை பாழ்படுத்தும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மைக் கொண்டவை.
சிவப்பு மிளகாயை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.