வெப் ஸ்டோரீஸ்
Happy bday hero - பிடிஎஸ் காட்சியை வெளியிட்ட பராசக்தி படக்குழு
இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக் வருகிறது.
படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் திரைப்படமாகும்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளது.

