சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்

Published on
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் கொம்புசீவி திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது.
1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com