வீடு, வாகனக் கடன்களுக்கான EMI குறைகிறது - ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சக்திகாந்த தாஸுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பரில் பதவியேற்றார். அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு(MPC) கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.