வெயிலைப்பார்த்து பயப்பட வேண்டாம்..இந்த 5 டிப்ஸ் போதும் ஜில்லுனு இருக்கலாம்

வெயிலைப்பார்த்து பயப்பட வேண்டாம்..இந்த 5 டிப்ஸ் போதும் ஜில்லுனு இருக்கலாம்

Published on
கோடைக் காலத்தில் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றலாம்
இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், பாதாம் பிசின் போன்றவற்றை ஜூஸ் மற்றும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.
தளர்வான உடைகள், அதுவும் பருத்தியில் தயாரான உடைகளை அணிந்தால் உடலுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கருப்பு நிற ஆடைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை தவிர்த்து லேசான நிறம் கொண்ட ஆடைகளை அணியவும்
சொந்தப் பணிகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் போது வெயிலில் இருந்து ஒதுங்கி நிழல் கொண்ட மரத்தடியில் அல்லது பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
கோடை காலத்தில் கடுமையான பயிற்சிகள் செய்வது உடலுக்கு சோர்வை ஏற்படுத்தும். ஆகவே, லேசான பயிற்சிகளை செய்யவும்.
உடற்பயிற்சி செய்து வியர்வையை துடைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு குளிக்கச் செல்லலாம். அதுவும் குளிர்ச்சியான நீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.
உச்சிவெயில் அடிக்கும் நேரத்தில் முடிந்தவரை வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்க்கலாம். சூடான, மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
மது, சிகரெட், காஃபி போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பம் கொண்ட சமயத்தில் கடுமையான வேலைகளை செய்வது மயக்கம், ஸ்டிரோக் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com