குளிக்கும் போது முடி உதிர்வது என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே எளிதில் தீர்வு காண முடியும்.
முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள் கூட தலைமுடியையை தேய்த்து குளிக்கும் போது முடி உதிருவதை பார்த்திருப்பார்கள்.
பலர் தலைக்கு குளிப்பதையே மிகவும் அலட்சியமாக இருப்பார்கள், தலைக்கு குளித்த பிறகு ஈரத்தை உறிஞ்சுவதற்கு டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றை செய்வார்கள்.
இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாளும் போது முடி பலவீனம் அடைந்து உதிர்கிறது.
முடி உதிர்வுக்கான காரணங்கள்:
போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும். ஜின்க், செம்பு, புரதம் மற்றும் இரும்பு சத்து உங்கள் உணவில் நிச்சயம் இருக்க வேண்டும்.
வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும். உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும். இருதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.
அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
புற்றுநோய், குடல் நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்.
வயதாவதால் முடி உதிர்வு ஏற்படும். உடல் எடை குறைவு காரணமாக முடி உதிர்வு ஏற்படும்.