தேங்காய் பால் சருமத்திற்கு தரும் அழகு

தேங்காய் பால் சருமத்திற்கு தரும் அழகு

Published on
முகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள்.
தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும்.
தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.
நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி அந்த நீரில் தேங்காய் பால், ரோஸ் வாட்டர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பதத்துடனும் இருக்கும்.
பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொண்டு மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும்.
தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.
முகப்பருக்களை ஒழிக்க முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள் நீங்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com