இந்த நேரங்களில் மருதாணி வைக்கக்கூடாது...! ஏன் தெரியுமா?

பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வது அழகுக்காக மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் தரும்.
இந்த நேரங்களில் மருதாணி வைக்கக்கூடாது...!  ஏன் தெரியுமா?
Published on

மருதாணியை மாலையில் பறிக்கக்கூடாது. மருதாணியை வியாழன், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வைக்க வேண்டும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வைப்பது மிகவும் சிறப்பானது.

பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும்.

ராகு காலம், எமகண்டத்தில் மருதாணி வைக்கக்கூடாது. அதே போல அமாவாசை திதியில் மருதாணி வைக்க கூடாது.

சந்திராஷ்டம காலங்களில் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும். அவரவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும்போது மட்டுமின்றி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களின் சந்திராஷ்டம் நடக்கும் காலங்களிலும் மருதாணி வைக்கக்கூடாது.

பொதுவாக மாலை 6 மணி மேல் மருதாணி வைக்கலாம். சுக்கிர ஓரையில் மருதாணி வைப்பது அதிர்ஷ்டத்தை தரும். மருதாணி வைக்கும்போது வடக்கு திசையை நோக்கி இருப்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com