முருங்கை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முருங்கை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Published on
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது.
முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே வராது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.
முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகும். இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் C கிடைக்கிறது.
மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com