ஒரு டம்ளர் தண்ணீரில் முருங்கை விதைகளை போடும்போது அந்த புரதம் தண்ணீரில் இருக்கும் அழுக்கு, மண் உள்ளிட்ட துகள்களை சுத்திகரித்து அடிப்பகுதியில் படியச் செய்துவிடும்.
முருங்கை விதை நீரை வடிகட்டும் தன்மை கொண்டுள்ளது
இதனை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எகிப்தில் முன்னோர்கள் தண்ணீரை சுத்திகரிக்க இந்த முறையை நீண்ட காலமாக பின்பற்றி வந்துள்ளனர் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பட்சத்தில் வளரும் நாடுகளில் குறைந்த விலையில் நீர் சுத்திகரிப்புக்கு தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.