2021-ம் ஆண்டு வெளியான 'பேச்சிலர்' படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து திவ்ய பாரதி பணியாற்றினார். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவின.
Divyabharathi
இது குறித்து இருவரும் பேசியிருந்தாலும், அவை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Divyabharathi
ஜி.வி. பிரகாஷின் குடும்பப் பிரச்சனைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், ஒரு நடிகரை, குறிப்பாக திருமணமான ஒருவருடன் ஒருபோதும் டேட்டிங் செல்லமாட்டேன்.
Divyabharathi
நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்லமாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதால் இதுவரை அமைதியாக இருந்து வந்தேன்.
Divyabharathi
ஆனால் அவை ஒரு எல்லையை தாண்டிவிட்டதால் தற்போது வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொய்யான தகவல்களால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.
Divyabharathi
நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண். வதந்திகளால் சோர்ந்துவிட மாட்டேன். வதந்தியை பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்.
Divyabharathi
இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என்று திவ்யபாரதி கூறியுள்ளார்.
Divyabharathi
அறிக்கை வெளியிட்டதை அடுத்து தற்போது நடிகை திவ்யபாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.