மாதுளையின் தோலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளதால் சளி, இருமல் தொண்டை வலி முதலானவற்றைப் போக்க உதவுகிறது.
தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். சிலர் தேநீரிலும் கலந்து பருகுகிறார்கள்.
நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று வீக்கம், தொற்று முதலானவற்றை குறைத்து ஒட்டுமொத்த செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.
உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை, நச்சுகளை வெளியேற்றக் கூடிய ஆக்ஸிஜனேற்றிகள் மாதுளை தோலில் அதிகமாக உள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.
மாதுளை தோல் பொடியை தேன் மற்றும் தயிருடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக மாறும்.
மாதுளை தோலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
வயதான தோற்றத்தை தடுத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முக சுருக்கங்கள் முதலானவற்றை தடுப்பதில் பங்கு வகிக்கிறது.
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பின் அளைவைக் குறைக்கிறது. மேலும் சிறந்த ரத்த ஓட்டத்திற்கும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.