

தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த தேர்தலைகளைவிட இத்தேர்தல் பெரும் ஆர்வத்தை மக்களிடையே உண்டாக்கியுள்ளது. காரணம் இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெகவும் களம் காண்கிறது. திமுகவிற்கு தான்தான் போட்டி எனவும் கூறிவருகிறார். இதனால் இத்தேர்லில் அவரின் கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறும், எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.
இச்சூழலில் சென்னையில் நடிகர் விஜய்க்கு பெரும் ஆதரவு அலை இருப்பது தெரியவந்துள்ளது. காரணம் தவெகவின் நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணும் தொகுதிகள் அதிகம் சென்னை மாவட்டமே. விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் என முக்கிய நிர்வாகிகள் சென்னையில்தான் போட்டி.
இதனால் அவரது ரசிகர்கள் சென்னையில் தவெகவிற்கு பெரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே மாலைமலர் தரப்பில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளுவர்கோட்டம் பகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பிலும், அங்கு விஜய்க்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது.