TN Assembly Election | அந்தியூர் பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

பெண்களுக்கு நிறைய செய்கிறார்கள் எப்போதும் மகளிர் ஓட்டு உதய சூரியனுக்கு தான். அதனால் எங்கள் ஓட்டு தி.மு.க.விற்கு தான்.
TN Assembly Election | அந்தியூர் பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 17 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் 5 பேரும், த.வெ.க.விற்கு தான் ஓட்டு என்று 17 பேரும் தெரிவித்தனர்.

எங்கள் ஓட்டு தி.மு.க.வுக்கு தான். இலவசமாக பஸ்சில் சென்று வருகிறோம். பெண்களுக்கு நிறைய செய்கிறார்கள் எப்போதும் மகளிர் ஓட்டு உதய சூரியனுக்கு தான். அதனால் எங்கள் ஓட்டு தி.மு.க.விற்கு தான்.

கல்லூரி மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.1000 பணம் கொடுக்கிறார்கள். லேப்டாப் கொடுத்து இருக்கிறார்கள். மீண்டும் வந்தால் நிறைய செய்வார்கள். கொள்கை நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் சமம் என்ற நினைக்கிறார்கள். அதனால் தி.மு.க.விற்கு தான் போடுவோம் என்று கூறினார்கள்.

அண்ணன் நிறைய செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். தாய்மாமன் சீர், அண்ணன் சீர், மாதம் ரூ.2500, இலவச பஸ், சிலிண்டர் தரேன்னு சொல்லி இருக்கிறார். ஆட்சி மாற்றம் வர வேண்டும். இரண்டு கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து விட்டார்கள். அதனால் விஜய் வரட்டும். வாய்ப்பு கொடுப்போம் என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க.விற்கு தான் ஓட்டு போடுவோம், என்.டி.ஏ. கூட்டணிக்கு போட வேண்டும் என்று ஒரு சிலரும் தெரிவித்தனர்.

இலவசம் கொடுத்து நாசமாகத்தான் போகிறது. மொத்தத்தில் யார் இலவசம் கொடுக்கவில்லையோ அவர்களுக்கு போடலாம் என்று சிலர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com