TN Assembly Election| புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி- கிருஷ்ணசாமி அறிவிப்பு

புதிய தமிழகம் சார்பில் 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 29-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
TN Assembly Election| புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி- கிருஷ்ணசாமி அறிவிப்பு
Published on: 

வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. அ.தி.மு.க.விடம் கூட்டணி பேசி வந்த நிலையில் தனித்து போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் சார்பில் 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 29-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றுபட்டு நின்று நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்போம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com