

புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரெட்மி 4 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.
அந்த வகையில் ரெட்மி 4 துவக்க விலை ரூ.8,499 முதல் துவங்குகிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ.500 குறைவு ஆகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4 மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் 3 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.8,499 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி 4 (2 ஜிபி) மாடலின் விலை குறைக்கப்படவில்லை. இதனை வாடிக்கையாளர்கள் ரூ.6,999 விலையில் அமேசான் இந்தியா மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வாங்க முடியும்.
ரெட்மி 4 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஹெச்.டி. 720x1280 பிக்சல், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI 8
- 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- கைரேகை சென்சார்
- 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ரெட்மி 4 மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக வெளியிடப்பட்டு இருக்கும் ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் வடிவமைப்பு, கேமரா மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போனும் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.