யூடியூப்பில் லைக் பட்டனுக்கு பதிலாக heart icon விரைவில் அறிமுகம்

யூடியூப் ஷார்ட்ஸ்களில் வரும் நாட்களில் புதிய அம்சங்களுடன் அப்டேட் வெளியாக உள்ளது.
YouTube replaces heart icon as like button
Published on

யூடியூப் ஷார்ட்ஸ்களில் புதிய அப்டேட்:

யூடியூப் நிறுவனம் வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ்களில் மாற்றம் செய்து புதிய அம்சங்களை வெளியிட உள்ளது.

இந்த அப்டேட்டில் ‘கிளியர் ஸ்கிரீன் மோடு’ என்ற அம்சம் அறிமுகமாக உள்ளது. இதன்மூலம் திரையில் உள்ள எழுத்துக்கள் மற்றும் பிற குறுக்கீடுகள் மறைக்கப்படும்.

மேலும் கவனச்சிதறல் இல்லாத பார்வை அனுபவத்தையும் யூடியூப் ஷார்ட்ஸ் பயனர்கள் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒரு புதிய 2x பிளேபேக் அப்டேட்டையும் அறிமுகம் செய்யவுள்ளது. இது பயனர்கள் வீடியோக்களை இரண்டு மடங்கு வேகத்தில் பார்க்கவும் அனுமதிக்கிறது.

இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த யூடியூப் லைக் பட்டனுக்கு பதிலாக இதய ஐகானை புதிய அப்டேட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.

பயனர்கள் திரையை தொடுவதன் மூலம் அதனை இடைநிறுத்தி, வீடியோவின் ஒலியை முழுவதுமாக குறைக்கும் அம்சங்களும் வெளியாக உள்ளது.

இறுதியாக யூடியூப்பில் உள்ள டிஸ்லைக் பட்டனை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஆர்வம் இல்லை மற்றும் இந்த சேனலை பரிந்துரைக்க மாட்டேன் என்ற விருப்ப அம்சங்களும் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com