

சிறார்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உடன் செய்யும் உரையாடல்களை பெற்றோர்கள் கண்காணிக்கும் புதிய வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் தளங்களில் தங்கள் குழந்தைகள் மெட்டா ஏஐயுடன் முந்தைய ஏழு நாட்களுக்கு மேற்கொண்ட உரையாடல்களை 'Insights' டேப் மூலம் கண்காணிக்க முடியும்.
இதில் பெற்றோருக்கு அந்த உரையாடல் குறித்து முழு விவரம் தெரியவராது, பதிலாக அந்த உரையாடல்கள் எதைப்பற்றியோ அந்த தலைப்புகள் வரும் பிரிவுகளை மட்டுமே காட்டும்.
உதாரணமாக, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை, பயணம், உடல்நலம் போன்ற பிரிவுகள் இதில் அடங்கும்.
ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உடற்பயிற்சி, ஃபேஷன் போன்ற குறிப்பிட்ட உட்பிரிவுகளையும் பார்க்க முடியும்.
தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.