/* STAGING CODE */

ஆறு மாத வேலிடிட்டியுடன் புது பிரீபெயிட் ரீசார்ஜ் அறிவித்த வோடபோன் ஐடியா

இந்த ரீசார்ஜ் அதிகபட்சம் ஆறு மாத வேலிடிட்டியுடன் வருகிறது.
ஆறு மாத வேலிடிட்டியுடன் புது பிரீபெயிட் ரீசார்ஜ் அறிவித்த வோடபோன் ஐடியா
Published on

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனம் தனது ப்ரீபெயிட் பயனர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.

புதிய பயனர்களை ஈர்க்கவும், ஏற்கனவே சேவை பயன்படுத்துவோரை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த ரீசார்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வோடபோன் ஐடியா ரீசார்ஜ் விலை ரூ. 2,475 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக டேட்டா தேவைப்படுவோருக்கு இந்த ரீசார்ஜ் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த ரீசார்ஜில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் ஆறு மாத வேலிடிட்டியுடன் வருகிறது.

பலன்கள்:

இது வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து ஈட்டும் வருவாயை அதிகப்படுத்துகிறது. விலை அதிகமானதாக தெரிந்தாலும், பயனர்களுக்கு இது அதிக பலன்களை வழங்குகிறது.

பலன்களை பொருத்தவரை வோடபோன் ஐடியா ரூ. 2,475 பிரீபெயிட் ரீசார்ஜ் மொத்தத்தில் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் அன்லிமிட்டெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.

அன்லிமிட்டெட் டேட்டா என்ற போதிலும் 28 நாட்களுக்கு 300 ஜிபி வரை வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com