Sora.. வீடியோ மேக்கிங் செயலியை திடீரென இழுத்து மூடிய Open AI.. ஷாக்கில் Disney - என்ன பிரச்சனை?

டிஸ்னியின் 200 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கதாபாத்திரங்களை சோரா மூலம் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
Sora.. வீடியோ மேக்கிங் செயலியை திடீரென இழுத்து மூடிய Open AI.. ஷாக்கில் Disney - என்ன பிரச்சனை?
Published on

ஓபன் ஏஐ நிறுவனம், தனது 'சோரா' (Sora) வீடியோ உருவாக்கச் செயலியைத் திடீரென மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்த செயலி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பயனர்கள் உள்ளீடு செய்யும் Prompt க்கு ஏற்றவாறு அப்படியே தத்ரூபமான வீடியோக்களாக உருவாக்கும் வசதியை கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்ட ஓபன்ஏஐ, "சோரா செயலிக்கு விடைகொடுக்கிறோம்" என சுருக்கமாக அறிவித்தது.

வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் டிஸ்னி நிறுவனம்ஓபன் ஏஐ உடன் 1 பில்லியன் டாலர் (சுமார் 8,300 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்திருந்தது.

இதன் மூலம் டிஸ்னியின் 200 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கதாபாத்திரங்களை சோரா மூலம் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

அதாவது, அந்த கதாபாத்திரங்களை வைத்து AI வீடியோக்கள் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதனால் ஹாலிவுட் உள்ளிட்ட உலகத் திரைத்துறையினர் சோரா போன்ற ஏஐ கருவிகளால் தங்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று அஞ்சினர்.

இருப்பினும் இந்த 1 பில்லியன் டக்கர் ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாததால், பணப் பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.

சோரா மூலம் உருவாக்கப்பட்ட டீப் பேக் (Deepfake) வீடியோக்கள், குறிப்பாக மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்களின் உருவங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் ஓபன் ஏஐ நிறுவனம் தற்போது வீடியோ உருவாக்கத்தைக் காட்டிலும், அதிக லாபம் தரக்கூடிய கோடிங் கருவிகள் மற்றும் கார்ப்பரேட் சேவைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com