சாம்சங் கேலக்ஸி ரிங் 2: பயனர்களின் உடல் நலத்தை மதிப்பிடும் வகையில் விரைவில் அறிமுகம்

கேலக்ஸி ரிங் 2 மூலம் சாம்சங் பயனர்கள் தங்களின் இதய நோய் அபாயங்கள் மற்றும் மன அழுத்த நிலைகளை மதிப்பிட உதவுகிறது.
Samsung Galaxy Ring 2 Upgrade
Published on

சாம்சங் நிறுவனத்தின் டிஜிட்டல் ஹெல்த் குழுவின் தலைவர் டாக்டர் ஹான் பாக், பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ரிங் 2 விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

கேலக்ஸி ரிங் 2 மூலம் சாம்சங் பயனர்கள் தங்களின் இதய நோய் அபாயங்கள், செயல்பாடு மற்றும் மன அழுத்த நிலைகளை மதிப்பிட உதவுகிறது.

இதுகுறித்து சமீபத்தில் பாக் அளித்த பேட்டியில், “ நாங்கள் அடுத்த தலைமுறைக்காக பணியாற்றி வருகிறோம். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கேலக்ஸி ரிங் 2 வழங்கவிருக்கும் அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் அதன் சென்சார்கள் மற்றும் பேட்டரி ஆயுளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது” என்று கூறினார்.

சாம்சங் கேலக்ஸி ரிங் 2 மாடல், கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான கேலக்ஸி 1 ரிங் மாடலை விட மெல்லியதாகவும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருந்து iOS விரிவாக்கத்துடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com