என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஓபன்-இயர் இயர்போன் பிரிவில் ரியல்மி... வேற லெவல் அப்டேட் வெளியீடு..!
    X

    ஓபன்-இயர் இயர்போன் பிரிவில் ரியல்மி... வேற லெவல் அப்டேட் வெளியீடு..!

    • ரியல்மி பட்ஸ் கிளிப் இலகுரக கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
    • வயர்லெஸ் ஹெட்செட் 11மிமீ டூயல்-மேக்னட் பெரிய டைனமிக் ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. ரியல்மி பட்ஸ் கிளிப் என்ற பெயரில் புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி அறிவித்துள்ளது. இதன் மூலம் கிளிப்-ஸ்டைல் ஓபன்-இயர் இயர்போன் பிரிவில் ரியல்மி என்ட்ரி கொடுப்பதை உறுதிப்படுத்துகிறது. புதிய இயர்பட்கள் மேம்பட்ட சவுகரியம், சூழ்நிலை விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்ட ஓபன்-இயர் வடிவமைப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் குறைந்த எடை மற்றும் நவீன கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கொண்டிருக்கும்.

    புதிய ரியல்மி பட்ஸ் கிளிப் மேம்பட்ட வாய்ஸ் தரம், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற நீடித்துழைப்பு ஆகியவற்றை வழங்குவதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக ரியல்மி பட்ஸ் கிளிப் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்து வருகிறது. ஆனால் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. இந்த வயர்லெஸ் ஹெட்செட் காதின் மீது அமர்ந்திருக்கும் ஓபன் இயர் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது நீண்ட நேரம் அணியும் வசதியையும் ஒருவரின் சுற்றுப்புறத்தை பற்றிய சிறந்த விழிப்புணர்வையும் வழங்கும் நோக்கில் உள்ளது.

    ரியல்மி பட்ஸ் கிளிப் இலகுரக கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இதன் ஒவ்வொரு இயர்பட்டும் 5.3 கிராம் எடையுள்ளதாக ரியல்மியின் வலைத்தளத்தில் உள்ள தயாரிப்பு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டைட்டானியம்-ஃபிட் (Titanium-Fit) காது வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் வியர்வை மற்றும் எண்ணெயை எதிர்க்கும் என்று கூறப்படும் மேட்-ஃபினிஷ் உடன் வரும். இந்த மாடல் டைட்டானியம் பிளாக் மற்றும் டைட்டானியம் கோல்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

    இந்த வயர்லெஸ் ஹெட்செட் 11மிமீ டூயல்-மேக்னட் பெரிய டைனமிக் ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சுயமாக உருவாக்கப்பட்ட பாஸ் மேம்பாட்டு அமைப்பு மற்றும் நெக்ஸ்ட்-பாஸ் அல்காரிதம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும், இது குரல் தெளிவைப் பராமரிக்கும் அதே வேளையில் குறைந்த அதிர்வெண் வெளியீட்டை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இயர்பட்கள் 3D ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் ஆடியோ கசிவை குறைக்க திசை ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.

    இதன் ஒவ்வொரு இயர்பட்களிலும் AI-அடிப்படையிலான என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் அழைப்புகளுக்கு காற்றின் சத்தத்தை தடுக்கம் இரட்டை மைக்ரோஃபோன்களைக் கொண்டிருக்கும். கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.4, SBC மற்றும் AAC கோடெக் சப்போர்ட், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி மற்றும் 45ms வரை லோ-ேலேடன்சி மோட் அடங்கும்.

    ரியல்மி பட்ஸ் கிளிப் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏழு மணிநேரம் வரை பிளேபேக், சார்ஜிங் கேஸுடன் 36 மணிநேரம் வரை பிளேபேக் வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இயர்பட்கள் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் மற்றும் USB டைப்-சி போர்ட் வழியாக சார்ஜ் செய்யப்படும்.

    Next Story
    ×