

ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), ஆந்திராபிக் (கிளாட்), எக்ஸ் (குரோக்) ஆகிய நிறுவன ஏஐகள் உலகவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே வேலையிடங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மைக்கோரோசாப்ட் உடைய சேவைகளை எளிதாக்க அந்நிறுவனம் கோ-பைலட் என்ற ஏஐ உதவியாளரை கடந்த 2023 இல் அறிமுகம் செய்தது.
மைக்கோரோசாப்ட்டின் எக்செல், பவர்பாயிண்ட் உள்ளிட்டவற்றில் வேலைகளை இந்த கோ-பைலட் எளிதாக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோபைலட் "பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே", பயனர்கள் இதன் 'பயன்பாட்டுக்கு அவர்களே பொறுப்பு' (At your own risk) என்று மைக்கோரோசாப்ட் அறிவித்துள்ளது.
கோபைலட் தரும் தவறான தகவல்களால் ஏற்படும் சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.