டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் - விரைவில் புதிய தளத்தை துவங்கும் மார்க் ஜூக்கர்பர்க்

புதிய சேவை திரெட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் - விரைவில் புதிய தளத்தை துவங்கும் மார்க் ஜூக்கர்பர்க்
Published on

மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த சேவை பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள சேவை ஜூலை 6-ம் தேதி அறிமுகமாவதாக கூறப்படுகிறது. புதிய சேவை திரெட்ஸ் (threads) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றே இருக்கும் என்றும், பயன்பாடுகள் டுவிட்டர் போன்றே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை மற்றும் மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான தளமாக இருக்கும் என்று தெரிகிறது.

புதிய சேவை பற்றிய தகவல், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கிறது. "திரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலி," என்றும், இது ஜூலை 6-ம் தேதி முதல் டவுன்லோடு செய்ய கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com