மெமரி சிப் விலை சூழ்ச்சி: அமெரிக்க நீதிமன்றத்தில் சாம்சங் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மீது வழக்கு

மூன்று நிறுவனங்களும் ஒரு சமயத்தில் DRAM உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டனர்.
Memory Chip Price Fixing
Published on

உலகின் கிட்டத்தட்ட அனைத்து மெமரி சிப்களையும் தயாரிக்கும் பணியில் சாம்சங், எஸ்.கே. ஹைனிக்ஸ் மற்றும் மைக்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து DDR3 மற்றும் DDR4 ஆகிய மெமரி சிப்களின் உற்பத்தியை குறைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் தங்களின் பெரும்பாலான உற்பத்தியை HBM-ஐ நோக்கி திருப்பியதாக கூறப்படுகிறது. HBM என்பது AI தரவு மையங்களுக்கு மிகவும் தேவைப்படும் விலை உயர்ந்த மற்றும் அதிக அளவிலான அலைவரிசை கொண்ட ஒரு வகை 3D அடுக்கு DRAM ஆகும்.

இதன் காரணமாக மெமரி சிப்களை குறைவான விலை கொடுத்து வாங்குபவர்கள், சுமார் 700% வரை அதிக விலை செலுத்த நேர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் ஒரு ஆரோக்கியமான சந்தையில் குறைந்தபட்சம் ஒரு நிறுவனமாவது வாடிக்கையாளர்களைக் கவர மெமரி சிப்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக மூன்று நிறுவனங்களும் உற்பத்திகளை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்து, ஒரு சமயத்தில் DRAM உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தனிநபர் நுகர்வோர் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் பதாயீ டன் எல்.எல்.பி நிறுவன வழக்கறிஞர் ஆஜராகினார்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி நோயல் வைஸ் முன்பு விசாரணைக்கு வந்து, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com