ஏஐ தொழில்நுட்பத்தை கண்டு மக்கள் அஞ்சுவது நியாயம்தான் - வெளிப்படையாக சொன்ன சுந்தர் பிச்சை

வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை கண்டு மக்கள் அஞ்சுவது நியாயம்தான் - வெளிப்படையாக சொன்ன சுந்தர் பிச்சை
Published on

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுரவளர்ச்சி கண்டு அஞ்சாதவர்கள் இல்லை. ஆக்கபூர்வமான பல வேலைகளை ஏஐ செய்தாலும் அது மனிதர்களின் வேலைகளை பறிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கு சான்றாக உலகப் பெருநிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கங்கள் செய்து வருகின்றன. ஏஐயை காரணம் காட்டி அண்மையில் மெட்டா நிறுவனமும் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

வளர்ந்து வரும் இந்த ஏஐ நுட்பத்தால் இனி புதிதாக வேலை சந்தைக்குள் நுழையும் இளைஞர்களுக்கும் நிச்சயமற்ற எதிர்காலம் உள்ளதாக கருத்து நிலவுகிறது.

பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, சமீபத்தில் படிப்பை முடித்த பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது.

இந்நிலையில் கூகுள் உடைய தாய் நிறுவனமான ஆரக்கிள் உடைய சிஇஓ சுந்தர் பிச்சை இதுகுறித்த தனது பார்வையை பாட்காஸ்ட் நிகழ்வொன்றில் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியதாவது, "இளம் தலைமுறையினர் இந்த சவால்களை தகர்த்தெறிந்து, ஒரு சிறந்த உலகை உருவாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் எப்போதும் உலகளாவிய வளர்ச்சிக்கு உதவியாகவே இருந்துள்ளன.

இன்றைய பட்டதாரிகள் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வடிவமைப்பதிலும், கையாள்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார்கள்.

கடந்த காலங்களில் மிகச் சாதாரண தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்ட போதே மக்கள் மத்தியில் அச்சம் இருந்தது.

ஆனால், தற்போதைய ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது மனிதகுலம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அளவிலான மாற்றமாகும்.

இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்ததை கிரகிப்பதற்கு மனித மூளை இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை.

எனவே, இந்தத் தொழில்நுட்பம் தங்களது எதிர்காலத்தை என்னவாக மாற்றுமோ என்று மக்கள் கவலைப்படுவது முற்றிலும் நியாயமானதுதான்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com