சீன செயலியை பயன்படுத்தி சாலையில் செல்லும் இ-ரிக்ஷக்களை நிறுத்தும் போக்கு - மத்திய அரசு அதிரடி தடை

பொறியாளர்களுக்காக ஒரு தொழில்நுட்ப வசதி பேட்டரிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.
சீன செயலியை பயன்படுத்தி சாலையில் செல்லும் இ-ரிக்ஷக்களை நிறுத்தும் போக்கு - மத்திய அரசு அதிரடி தடை
Published on

மொபைல் செயலியை பயன்படுத்தி ப்ளூடூத் மூலம் சாலையில் செல்லும் மின்சார ரிக்‌ஷா ஆட்டோக்களை நிறுத்தும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து BAT-BMS உள்ளிட்ட 2 சீன செயலியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எப்படி செயல்படுகிறது?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான இ-ரிக்‌ஷாக்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பேட்டரிகளின் வோல்டேஜ், வெப்பநிலை மற்றும் சார்ஜ் அளவைச் சோதிப்பதற்காக பொறியாளர்களுக்காக ஒரு தொழில்நுட்ப வசதி பேட்டரிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான இ-ரிக்‌ஷாக்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ள சீன தயாரிப்பு 'BMS' அமைப்பைக் கொண்டுள்ளன.

ப்ளூடூத் மூலம் இணைக்கப்படக்கூடிய இந்த பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை BAT-BMS போன்ற செயலிகளைத் தரவிறக்கம் செய்து யார் வேண்டுமானாலும் முடக்கலாம்.

இது குறித்து மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், "இந்தச் செயலிகள் குறித்து முழுமையான விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com