6000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ஹெச்எம்டி ஸ்மார்ட்போன்

பிரைமரி கேமரா மற்றும் கூடுதலாக மற்றொரு லென்ஸ் வழங்கப்படுகிறது.
6000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ஹெச்எம்டி ஸ்மார்ட்போன்
Published on

ஹெச்எம்டி நிறுவனம் சமீபத்தில் தனது லூமா 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது. லூமா 4ஜி மாடல் அறிமுகமான நான்கே மாதங்களில் இந்த ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனின் விவரங்கள் வெளியாகி வருகிறது.

அதன்படி நம்பத்தகுந்த டிப்ஸ்டரான ஸ்மாஷ்எக்ஸ் 60 வெளியிட்டுள்ள தகவல்களில் ஹெச்எம்டி லூமா 2 மாடலில் 6.75 இன்ச் HD பிளஸ் IPS LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 8MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா மற்றும் கூடுதலாக மற்றொரு லென்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் யுனிசாக் டி7280 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6000mAh பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் வழங்கப்படும் என தகவல்.

இத்துடன் 3.5mm ஹெட்போன் ஜாக், நோக்கியாவின் OZO ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் புளூ, லைட் சான்ட் மற்றும் மிட்நைட் லேக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com