ஜிடிஏ 6 இந்திய முன்பதிவு தொடக்கம்.. விலைப் பட்டியல் வெளியீடு

டிஜிட்டல் முன்திவுகளுக்கு ஒரு மாத ஜிடிஏ பிளஸ் சந்தா வழங்கப்படும்.
ஜிடிஏ 6 இந்திய முன்பதிவு தொடக்கம்.. விலைப் பட்டியல் வெளியீடு
Published on

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிடிஏ 6 கேமின் முன்பதிவு துவங்கியது. மேலும், இந்த கேமின் இந்திய விலை விவரங்கள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டன.

ஜிடிஏ 6 கேம் ஸ்டான்டர்டு மற்றும் அல்டிமேட் என இரு எடிஷன்களில் கிடைக்கும். இதில் லூசியா மற்றும் ஜேசன் கதையுடன் அல்டிமேட் எடிஷனின் வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆடைகள் கூடுதலாக வழங்கப்படும்.

விலை விவரங்கள்:

சர்வதேச சந்தையில் ஜிடிஏ 6 ஸ்டான்டர்டு எடிஷன் விலை 79.99 டாலர்கள் என்றும் அல்டிமேட் எடிஷன் விலை 99.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ. 5,999 மற்றும் ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் புதிய ஜிடிஏ 6 ஸ்டான்டர்டு மற்றும் அல்டிமேட் எடிஷன் முன்பதிவுகளுக்கு வின்டேஜ் வைஸ் சிட்டி பேக் வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான 80-க்களின் தீம் கொண்ட ரெட்ரோ பொருட்கள் வழங்கப்படும்.

டிஸ்க் வெர்ஷன்:

இத்துடன் டிஜிட்டல் முன்திவுகளுக்கு ஒரு மாத ஜிடிஏ பிளஸ் சந்தா வழங்கப்படும். இதை கொண்டு பயனர்கள் ஜிடிஏ 5 மற்றம் கிளாசிக் ராக்ஸ்டார் கேம்களை விளையாட முடியும்.

ஜிடிஏ 6 கேம் வெளியீட்டின் போது டிஸ்க் வெர்ஷன் கிடைக்காது என ராக்ஸ்டார் கேம்ஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஜிடிஏ 6 பிசிக்கல் வெர்ஷனுடன் டிஜிட்டல் டவுன்லோட் கோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு கேம் வெளியீட்டிற்கு முன்பே நவம்பர் 12-ஆம் தேதி முதல் பிரீ-லோடு செய்ய முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com