search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் இயங்கி வந்த இரண்டு டுவிட்டர் அலுவலகங்களை இழுத்து மூடிய எலான் மஸ்க்?
    X

    இந்தியாவில் இயங்கி வந்த இரண்டு டுவிட்டர் அலுவலகங்களை இழுத்து மூடிய எலான் மஸ்க்?

    • டுவிட்டர் நிறுவனம் இந்திய அலுவலகங்களில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தகவல்.
    • சர்வதேச அளவில் டுவிட்டர் நிறுவன செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக எலான் மஸ்க் இப்படி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று டுவிட்டர் நிறுவன அலுவலகங்களில் இரண்டு மூடப்பட்டு விட்டதாகவும், அதில் பணியாற்றி வந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வீட்டில் இருந்தபடி பணியற்றலாம் என டுவிட்டர் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. தற்போது சரிவில் சிக்கிக் கொண்டுள்ள நிறுவனத்தை மீட்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தது. இது டுவிட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 90 சதவீதம் ஆகும். இந்த வரிசையில் தான், தற்போது புது டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வந்த டுவிட்டர் அலவலகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

    இரு நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இந்தியாவில் டுவிட்டர் நிறுவன அலுவலகம் தற்போது பெங்களூருவில் மட்டுமே இயங்கி வருகிறது. இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்ட விவகாரம் குறித்து டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உலகம் முழுக்க டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம், அலுவலங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடர்ந்து எடுத்து வருகிறார்.

    இந்த நடவடிக்கைகளின் மூலம் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனம் 2023 வாக்கில் நிதி நிலையில் மேம்பட்டு இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா இதுவரை மிகமுக்கிய சந்தையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க் இந்திய டுவிட்டர் அலுவலகங்களை மூடும் நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்.

    இது தற்போதைய சூழலில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தைய அத்ததைய முக்கியத்தம் கொண்டிருக்கவில்லை என்பதையே குறிக்கிறது. கடந்த காலங்களில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×