22 ஆண்டுகள் பழைய ஐபாட் மாடலை ரூ. 24 லட்சத்திற்கு வாங்கிய நபர்!

ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர்.ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார்.
22 ஆண்டுகள் பழைய ஐபாட் மாடலை ரூ. 24 லட்சத்திற்கு வாங்கிய நபர்!
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் தொழில்நுட்ப துறையை திரும்பி பார்க்க செய்திருக்கின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபாட் மாடல் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் மாடல் திறக்கப்படாத நிலையில் ஏலத்திற்கு விற்பனைக்கு வந்தது.

இதனை ரேலி என்ற நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஏலத்தில் பங்கேற்றவர் திறக்கப்படாத நிலையில் இருந்த ஒரிஜினல் ஐபாட் மாடலை 29 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறார். ரேலி என்ற தளம் பயனர்கள் மதிப்பு மிக்க பொருட்களை வாங்க வழி செய்கிறது. 2021-ம் ஆண்டு இந்த ஐபாட் மாடல் 5 ஆயிரம் பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒரு பங்கின் விலை 5 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது இந்த ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். இத்தனை விலை கொடுத்து ஒரிஜினல் ஐபாட் மாடலை யார் ஏலத்தில் வாங்கினார்கள் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது இந்த ஐபாட் மாடல் போர்டபில் மியூசிக் பிளேயர்கள் பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார். மெல்லிய டிசைன், பல்வேறு புதுமை மிக்க அம்சங்கள் (அன்றைய தேதிக்கு) உள்ளிட்டவை இசை பிரியர்களை பெரிதும் கவர்ந்தது. அன்று இதன் விலை 399 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதும், அதிகம் பேர் வாங்கியதால் பிரபலமான சாதனமாக இது மாறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com