மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் AI.. எல்லாம் கைமீறும்போது Kill switch வேண்டும் என்கிறார் டிரம்ப்

அண்மையில் ஆந்திரோபிக் நிறுவனம் உருவாகியுள்ள கிளாட் மிதோஸ் ஏஐ மிகவும் சக்திவாய்ந்த ஒன்று என்றும் எந்த இணையத்தையும் ஊடுருவ கூடியது என்றும் கூறப்பட்டது.
மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் AI.. எல்லாம் கைமீறும்போது Kill switch வேண்டும் என்கிறார் டிரம்ப்
Published on

கூகுள்(ஜெமினி), ஓபன்ஏஐ (சாட்ஜிபிடி), எக்ஸ் (குரோக்) மற்றும் ஆந்த்ரோபிக்(கிளாட்) போன்ற முன்னணி நிறுவனங்களின் ஏஐ சாட்போட்கள் சாமானிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளன.

வேலையிடம் தொடங்கி தனிப்பட்ட தேவைகள் வரை ஏஐ மயமாக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் இந்த ஏஐகள் மனிதனை மீறி தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினால் என்னவாகும் என்ற அச்சம் நிபுணர்கள் முதல் சாமானியர்கள் வரையிலும் இருக்கவே செய்கிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், தேவைப்படும்போது அதனை முடக்குவதற்கு ஒரு வழிமுறை இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், செயற்கை நுண்ணறிவு வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, ​​அவர், "ஆம், அது முற்றிலும் சாத்தியம். வங்கி அமைப்பைச் சிறந்ததாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்கக்கூடிய தொழில்நுட்பமாக அது இருக்கலாம்" என்று பதிலளித்தார்.

செயற்கை நுண்ணறிவு வங்கித் துறை போன்ற துறைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும் திறமையானதாகவும் மாற்றக்கூடும், ஆனால் அது குறிப்பிடத்தக்க அபாயங்களையும் கொண்டுள்ளது என்று கூறினார்.

ஆனால் எதிர்காலத்தில் அது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால் செயற்கை நுண்ணறிவு கடுமையான அரசாங்கக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

எல்லாம் கைமீறி செல்லும்போது அதை செயலிழக்க செய்ய கூடிய கில் சுவிட்ச் (Kill switch) போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கில் சுவிட்ச் எவ்வாறு செயல்படும், அதை யார் கட்டுப்படுத்துவார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் விளக்கவில்லை.

அண்மையில் ஆந்திரோபிக் நிறுவனம் உருவாகியுள்ள கிளாட் மிதோஸ் ஏஐ மிகவும் சக்திவாய்ந்த ஒன்று என்றும் எந்த இணையத்தையும் ஊடுருவ கூடியது என்றும் கூறப்பட்டது. இதனால் சைபர் தாக்குதல்களுக்கு அது பயன்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆந்திரோபிக் நிறுவனமே அந்த அச்சகத்தில் அதை வெளியிட தயங்குவதாக கூறப்படுகிறது. முதலில் சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அந்த மாடலை வழங்கி ஆய்வு செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் டிரம்ப் உடைய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com