வருமான வரிக்கும் வந்தாச்சு AI.. Kar Saathi சிறப்பம்சம் என்ன?

2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
வருமான வரிக்கும் வந்தாச்சு AI..  Kar Saathi சிறப்பம்சம் என்ன?
Published on

வருமான வரி செலுத்தும் நடைமுறை பலருக்கு தலைவலி பிடித்த காரியமாக இருக்கும்.

எனவே வரி செலுத்தும் முறையை எளிமையாக்க புதிய இணையத்தளம் ஒன்றை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தளத்தில் வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்க 'கர் சாதி' (Kar Saathi) என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட் இணைக்கப்பட்டுள்ளது.

இது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு செல்லமலேயே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி, புதிய வரி விதிப்புகள் என்ன, படிவங்களை எங்குப் பதிவிறக்கம் செய்வது போன்ற அனைத்து சந்தேகங்களையும் இந்த ஏஐ கருவி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் புதிய விதிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள இது பெரிதளவில் பயன்படும் என்று கருதப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com