போக்கோ பிராண்டிங்கில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி

சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி
Published on

சியோமியின் ரெட்மி பிராண்டு சீனாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடல் போக்கோ எக்ஸ்3 ஜிடி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வெர்ஷன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்பதால், இதன் 5ஜி வேரியண்ட் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படலாம். அம்சங்களை பொருத்தவரை இதன் 4ஜி வேரியண்டில் 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்ககப்பட்டு உள்ளது.

போக்கோ நிறுவனம் போக்கோ எப்3 ஜிடி மாடலை 2021 மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இது ரெட்மி கே40 கேமிங் எடிஷன் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ எக்ஸ்3 ஜிடி மாடலின் விலை குறைவாக நிர்ணயம்  செய்யப்படலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com