ரூ. 2499 விலையில் கேமிங் ஹெட்போன் அறிமுகம்

போட் நிறுவனத்தின் புதிய கேமிங் ஹெட்போன் மாடல் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
போட் இம்மோர்டல் 1000d
போட் இம்மோர்டல் 1000d
Published on

கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான அக்சஸரீக்கள் விற்பனையும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதையொட்டி போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேமிங் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

போட் இம்மோர்டல் 1000d ஹெட்போன் 50mm டிரைவர் கொண்டிருக்கிறது. இந்த ஹெட்போன் 3D ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ், 7.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இவை ஹெட்போனில் 360 டிகிரி ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த ஹெட்போனில் கழற்றக்கூடிய மைக் மற்றும் ENx தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோவை கட்டுப்படுத்த இன்-லைன் ரிமோட் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஆடியோ, மைக் மற்றும் எல்.இ.டி.க்களை கட்டுப்படுத்தலாம்.

கேமிங் தோற்றத்தை ஏற்படுத்த இந்த ஹெட்போன் RGB லைட்களை கொண்டிருக்கிறது. மிக குறைந்த எடை, மென்மையான இயர்-கப் இருப்பதால் போட் இம்மோர்டல் 1000d நீண்ட நேர பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கிறது.

புதிய போட் இம்மோர்டல் 1000d கேமிங் ஹெட்போன் பிளாக் மற்றும் வைட் சேபர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2499 ஆகும். இந்த ஹெட்போன் அமேசான் மற்றும் போட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com