ரெட்மி 8 இந்திய வெளியீட்டு விவரம்

சியோமியன் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 8
ரெட்மி 8
Published on

சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முன்னதாக M1908C3IC  என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆனது.

அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை பெறாத நிலையில் கேமரா மட்டும் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் ஸ்கிரீன், 156.3×75.4×9.4mm அளவுகளில் உருவாகியுள்ளது. இது அளவில் சற்று சிறியதாகவும், ரெட்மி 7 மாடலை விட தடிமனாகவும் இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. முந்தைய ரெட்மி 7 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருந்தது.

3சி சான்று பெற்றிருப்பதால், இதில் 10வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்படுவதால் இது ரெட்மி நோட் 8 மாடலாக இருக்காது. ரெட்மி நோட் 8 மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்.பி. சென்சாருடன் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது.

ரெட்மி 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்

- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10

- டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

- 8 எம்.பி. செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார்

- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

- எஃப்.எம். ரேடியோ

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- யு.எஸ்.பி. டைப்-சி

- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ரூ. 7,999 எனும் துவக்க விலையில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ரெட்மி 8 விலையும் இதே போன்று நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com