இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டு ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி எக்ஸ்.டி.
ரியல்மி எக்ஸ்.டி.
Published on

ரியல்மி பிராண்டின் எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. வெளியீட்டின் போது இதன் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் ரூ. 16,999 விலையில் வெளியிட்டது.

இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm பிக்சல், f/2.4 வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு VOOC 3.0 சார்ஜரும் உடன் வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com