குவாட் கோர் கேமரா நுட்பத்தை கொண்ட ரியல் மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 புரோ என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி 5
ரியல்மி 5
Published on

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 புரோ என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. இரண்டுமே குவாட் கோர் கேமரா நுட்பத்தை உள்ளடக்கியவை.

ரியல்மி 5 புரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இது 6.3 அங்குல திரையைக் கொண்டது. இதன் பின்பகுதியில் உள்ள முதலாவது கேமரா 48 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது கேமரா 8 மெகா பிக்ஸெல்லும், மூன்றாவது மற்றும் நான்காவது கேமரா தலா 2 பிக்ஸெல்லும் கொண்டவை. செல்பி பிரியர்களுக்காக முன்பகுதியில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது.

மேலும் நீண்ட நேரம் செயல்படும் வகையில் 4,035 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. அத்துடன் விரைவாக சார்ஜ் ஆக 3.0 வி.ஓ.ஓ.சி. சார்ஜிங் அமைப்பும் உள்ளது. இதனால் 50 சதவீத சார்ஜ் 30 நிமிடங்களில் ஏறும். இதில் இரண்டு மாடல்கள் அதாவது 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் உள்ளவை வந்துள்ளன. அதாவது 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் உடையது மற்றொரு மாடலாகும். இரட்டை சிம் வசதி கொண்டது. விரல் ரேகை சென்சார் வசதி கொண்டது.

நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் அழகுற இது வெளி வந்துள்ளது. 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.14,999 மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.16,999. செப்டம்பர் 4-ந் தேதி முதல் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

ரியல்மி 5 மாடலானது பயர் புரூப் பிரேமை கொண்டது. இது 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் (விலை ரூ.9,999), 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் (விலை ரூ.10,999), மற்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் (விலை ரூ.11,999) என மூன்று வண்ண வேரியன்ட்களில் வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com