இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 குறைப்பு

இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ எஃப்11
ஒப்போ எஃப்11
Published on

இந்தியாவில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமரா மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் தற்சமயம் ரூ. 7,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இதன் விலையில் ரூ. 500 குறைக்கப்பட்டிருந்தது.

ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி.) மாடல் விலை ரூ. 16,990 இல் இருந்து தற்சமயம் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் எஃப்11 ப்ரோ மாடலுடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com