விரைவில் இந்தியா வரும் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நோக்கியா 3.4
நோக்கியா 3.4
Published on

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 

சர்வதேச சந்தையை தொடர்ந்து தற்சமயம் இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

அந்த வகையில் இவற்றின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறியப்படவில்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமராக்கள், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com