இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள்

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
நோக்கியா போன்
நோக்கியா போன்
Published on

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அவ்வப்போது நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 6.3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் இந்த வரிசையில் நோக்கியா 2.4 இணைந்துள்ளது.

என்ட்ரி லெவல் மாடலான நோக்கியா 2.4 இந்த ஆண்டின் அடுத்த காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் கனடா நாட்டின் சான்றளிக்கும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்து இருக்கிறது.

அதன்படி புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் நோக்கியா 2.4 2 ஜிபி ரேம், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மற்றும் 5 எம்பி சென்சார்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com