search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆன சியோமி 13 லைட் விவரங்கள்
    X

    கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆன சியோமி 13 லைட் விவரங்கள்

    • சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் வெளியாகி உள்ளது.
    • புது சியோமி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த சீரிசில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே கன்சோல் தளத்தில் சியி (Ziyi) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி 13 லைட் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அதன் அம்சங்களும் லிஸ்டிங்கில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 13 லைட் மாடலில் FHD+ ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல், செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்படுகிறது. சியோமி 13 லைட் மாடலுக்கான சியி குறியீட்டு பெயர் சியோமி சிவி 2 மாடலை குறிக்கும்.

    சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் லைட் எடிஷன் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் தான் வழங்கப்பட்டு இருந்தது. இதுதவிர FHD+ டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம், MIUI13 போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சியோமி 13 லைட் அம்சங்கள், சியோமி சிவி 2 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக புது சியோமி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×