

சாம்சங் நிறுவனம் தனது ரோலபில் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளை வேகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது வழக்கமான ஸ்மார்ட்போனாக இருந்து அதிகபட்சம் ஒரு டேப்லெட் அளவுக்கு விரிவடையும் தன்மை கொண்டிருக்கும்.
ரோலபில் போன்:
இதுகுறித்து தென் கொரிய அவுட்லெட் மெய்ல் பிசினஸ் வெளியிட்டுள்ள தகவல்களில், சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் முக்கிய குறிக்கோள்: உலகின் முதல் ரோலபில் போனை 2028-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திற்குள் வணிக ரீதியில் அறிமுகம் செய்வது தான் என கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ரோலபில் போன் கேலக்ஸி S28 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த புதுவகை ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z ஸ்லைடு என அழைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்ப்ளே:
புதிய ரோலபில் போன் அதிகபட்சம் 10-இன்ச் 16:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலை தொடர்ந்து 2030-ஆம் ஆண்டு இதே சீரிசில் இரண்டாவது மாடல் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனினும், சாம்சங் டிஸ்ப்ளே பங்குகள் கடந்த ஆண்டின் 4-ஆம் காலாண்டில் 41.8 சதவீதமாக இருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 27 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்த நிலையில், சாம்சங் புதிய ரோலபில் போன் இந்த பிரிவில் அந்நிறுவனம் போட்டியை பலப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.