மிட்-ரேன்ஜ் மாடலில் 200MP கேமரா.. அடுத்த அதிரடிக்கு தயாரான ரெட்மி..!

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது. ரெட்மி நோட் 13 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்களில் ஃபிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்.
கோப்புப் படம் 
கோப்புப் படம் 
Published on

ரெட்மி பிரான்டு சீன சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாத வாக்கில் சீன சந்தையில் அறமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய ரெட்மி நோட் 13 சீரிசில்- ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என குறைந்தபட்சம் மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் பற்றிய புது விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது.

கோப்புப் படம் 
கோப்புப் படம் 

கோப்புப் படம் 

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிசில், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா, 4x ஜூம் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசைனை பொருத்தவரை ரெட்மி நோட் 13 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்கள் ஃபிளாட் டிஸ்ப்ளேவும், நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் வளைந்த எட்ஜ் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com